சிந்தனைகள் – JOURNAL

அம்மா

15780932_1712001749090490_3572799192490691851_n


படித்தது 4 (10/12/2016)

என் செயலாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே

படித்தது 3 (14/3/2016)

இன்றைய ஈழம் அக்காலத்தில் சேரன் தீவு என்று பெயர் பெற்றிருந்தது. சேரன் தீவில் வாழ்ந்த சேர இளவரசர்கள் கடற்பயணங்களில் வள்ளவர்கள். புதிய நாடுகளைக் காண்பதிலும், புதியப் பொருள்களை எதிர்பாராமல் கண்டுபிடிப்பதில்லும் வல்லவர்கள். இவர்களைப் பற்றிய ஒரு தொல்கதை பழைய ஈழத்தில் வழங்கி வந்தது. இதை கேள்வியுற்ற ஒரேசு வால்போல் என்பவர் “எதிர்பாராமல் செய்யும் புதிய கண்டுபிடிப்பு”களுக்குச் சேரந்தீவின் இளவரசர்கள், கண்டுபிடிப்பு எனும் கருத்தில் seran + deep = serendipity = happy and unexpected findings by chance என்னும் புதிய சொல்லையே ஆங்கிலத்துக்குப் படத்துக் கொடுத்துவிட்டார்.

-உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம்


படித்தது 2

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே மெய்போ லும்மே

மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால்

பொய்போ லும்மே பொய்போ லும்மே


படித்தது 1

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவங் காண்கிலேன் – என்றுந்தான்

எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைகேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது

                (அற்புதத்திருவந்தாதி)