HINDU ENDOWMENT BOARD & ISSUE


2/12/18

30/11/18

14/11/18

10/6/18

28/5/18

இந்து அறப்பணி வாரியத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும்! மதியழகன் எச்சரிக்கை

ஜோர்ஜ்டவுன், மே 28-
நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அசல் தமிழர்களை குறி வைத்து அவர்தம் கோவில் உடமைகளை இந்து அறப்பணி வாரியம் என்ற ரூபத்தில் பெயர் மாற்றம் செய்து கடத்த திட்டமிட்டிருந்தால், அதை தடுத்து நிறுத்த போராட்டம் வெடிக்குமென என ஐபிஎப் உத்தாமா தலைவர் வீ.மு. மதியழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவரது முகநூலில் இந்து அறப்பணி வாரியத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆலயங்களில் தலைவர்களோடு இணைந்து எடுத்துக் கொண்ட நிழல்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

இதோடு பினாங்கு இரண்டாம் முதல்வர் மீது அவர் சரமாறியான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். 3 தங்கப்பாலங்கள் மாயமாய் போனதாகவும் 300,000,00 பணம் என்னவானது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்று ஆலயங்களின் சொத்துகளை சொந்தமாக்க இந்து அறப்பணி வாரியம் முயற்சிக்கின்றது. இது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறியுள்ளார். இது தேவையில்லாத வேலையில்லாத வேலை.

ஆலயங்கள் குறித்து விவாதிக்க குலசேகரன் சித்தரோ, ஞானியோ, யோகியோ, ரிஷியோ இல்லை. அதனால் ஆலய விவகாரங்களை விட்டுவிட்டு இந்திய சமுதாயத்திற்கான இதர பிரச்னைகளுக்கு அவர் முக்கியத்துவம் வழங்க வேண்டுமென மதியழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே இந்து அறப்பணி வாரியத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆலயங்களின் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார்.


இந்து அறப்பணி வாரியம் அமைப்பதற்கு மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பு! மோகன் ஷான்

பெட்டாலிங் ஜெயா, மே 28-
பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் நாட்டில் இந்து அறப்பணி வாரியம் அமைப்பதில் முக்கியத்துவம் காட்டி வருவதைக் கண்டு மலேசிய இந்து சங்கமும் இந்து அமைப்புகளும், பெரும்பாலான இந்து ஆலயங்களும் அதிருப்தி கொண்டுள்ளதாக மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கை பின்வருமாறு:-

புதிதாக ஆட்சி அமைத்துள்ள பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் நாட்டில் இந்து அறப்பணி வாரியம் அமைப்பதில் முக்கியத்துவம் காட்டி வருவதைக் கண்டு மலேசிய இந்து சங்கமும் இந்து அமைப்புகளும், பெரும்பாலான இந்து ஆலயங்களும் அதிருப்தி கொண்டுள்ளன.

இந்து அறப்பணி வாரியம் அமைப்பதன் மூலம் ஆலயங்களையும் ஆலய நிர்வாக முறையையும் கட்டுப்படுத்தலாம் என்று இவர்கள் கருதுவது இப்பிரச்சனைக்கு தீர்வாகாது என மலேசிய இந்து சங்கம் தெளிவுப்படுத்த விரும்புகிறது.ஒரு சில ஆலயங்கள் செய்யும் தவறுகளை முன்னிருத்திக் கொண்டு, நாட்டில் முறையாக இயங்கி கொண்டிருக்கும் ஆலயங்கள் உட்பட அனைத்து ஆலயங்களையும் கட்டுப்படுத்தி அரசாங்க அமைப்புடன் வைத்துக் கொள்வது முறையான ஒரு செயல் அல்ல.

1964ஆம் ஆண்டு முதல் இன்று வரை மலேசிய இந்து சங்கம், இந்நாட்டில் உள்ள ஆலயங்கள் மற்றும் இந்து சமயத்தைக் காத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அரை நூற்றாண்டாய் மலேசிய இந்து சங்கம் சமய வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கினை ஆற்றி வரும் வேளையில், இந்து அறப்பணி வாரியம் அமைக்க வேண்டி முன்வைக்கப்பட்ட கருத்துகள் யாவற்றையும் மலேசிய இந்து சங்கம் ஏற்கனவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் சில விசயங்களில் மலேசிய இந்து சங்கத்திற்கு தகுந்த அதிகாரம் இல்லாத ஒரே காரணத்தால் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதும் நோக்கத்தக்கது.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் மலேசிய இந்து சங்கத்திற்கு முறையான அதிகாரத்தை வழங்கினால் ஆலயச் செயல் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு காண வழி பிறக்கும். அதனை விடுத்து, இதற்காக ஒரு வாரியத்தை அமைத்து அதன் மூலமாக இக்காரியங்களைச் செய்ய நினைப்பது வருத்தற்குரிய விசயமாகும்.

அரசாங்கத்தால் அமைக்கப்படும் அறப்பணி வாரியம், அரசின் முழு கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்பதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஓர் உதாரணம். இன்றைய அரசாங்கம் வாரியத்தை அமைத்து, ஆலயங்கள் மற்றும் அதன் சொத்துகளை அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால், பிற்காலத்தில் ஆட்சி மாற்றமோ அல்லது முக்கிய தலைவர்களின் மாற்றமோ அல்லது மதவாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலோ நமது இந்து ஆலயங்களின் நிலை என்னவாகும்?இம்மாதிரியான ஒரு சம்பவத்தை நம் சமுதாயம் ஏற்கனவே அனுபவித்து இருப்பது நமக்கு தெரிந்த உண்மையே. அதுதான் ‘South Indian Labour Fund.

அதன் நிலை இன்று என்ன என்பது அனைத்து இந்தியர்களுக்கும் தெரியும். அதன் கீழ் உருவாக்கப்பட்ட ஆறுமுக பிள்ளை கல்லூரியின் பெயர் மட்டுமே தமிழினத்தைச் சார்ந்து இருக்கிறதே தவிர அங்கு இந்தியர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பது தான் உண்மை. இதே நிலை, இந்து அறப்பணி வாரியத்திற்கும் அது கொண்டுள்ள சொத்துடைமைகளுக்கும் வராது என்று யாரும் உறுதிப்படுத்த முடியுமா?

பத்துமலை மறுசீரமைப்பு பேரணி காலத்திற்கு ஏற்ற ஒன்றாக இருந்தாலும் அதில் அவசரம் காட்டாமல் தீர ஆலோசித்து ஆலய நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்களை அழைத்து முறையான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் நல்லதொரு தீர்வை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று இவ்வேளையில் மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

பத்துமலை தேவஸ்தானம் மீதான எதிர்ப்பினை மையமாக கொண்டு நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நினைப்பது சரியல்ல. இந்து அறப்பணி வாரியத்தை அமைக்கும் முன், நாட்டில் உள்ள முக்கிய ஆலயங்களோடும் மலேசிய இந்து சங்கத்தோடும் கலந்து ஆலோசித்து இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையை கண்டறிந்து செயல்பட வேண்டும் என பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இந்து சமய வளர்ச்சியில் கடந்த கால அரசாங்கம் செய்த அதே தவற்றை இந்த அரசாங்கம் செய்து விடக் கூடாது என்பதே மலேசிய இந்து சங்கத்தின் தாழ்மையான வேண்டுக்கோள். நம் நாட்டில் உள்ள மற்ற எந்த சமயத்திற்கும் இம்மாதிரியான வாரியங்கள் அமைக்கப்பட்டது கிடையாது என்பது முக்கியமானது. சர்வ சமய மன்றத்தில் இடம்பெற்றுள்ள மற்ற சமயத்தினர் இடையிலான கலந்துரையாடலின் போது இது தெரியவந்ததோடு இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படுவதற்கு அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரிலும் பினாங்கிலும் அமைக்கப்பட்டுள்ள இந்து வாரியங்கள் தங்களின் கீழ் பதிவுப் பெற்ற ஆலயங்களைத் தவிர்த்து மற்ற ஆலயங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.அதுபோலவே, வாரியத்தின் கீழ் பதியப்பட்டுள்ள ஆலயங்களில் அதன் நிர்வாகம் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக, அரசில் உள்ள கட்சியினைச் சேர்ந்தவர்களால் நியமிக்கப்படுகிறார்கள். இதனால், அவ்வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆலய உறுப்பினர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது.

தேர்தல் காலத்தில், கொள்கையறிக்கையில் கூறப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அனைத்து மாநிலங்களிலும் இந்து அறப்பணி வாரியத்தை அமைக்க அரசு அவசரம் காட்டாமல் அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து சிறந்த முடிவு எடுக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்

http://www.anegun.com/


“No” to Hindu Endowment Board!

MHS do not support the proposed Hindu Endowment Board!

May 28 – Petaling Jaya, Selangor

Hindu organizations and Hindu temples are dissatisfied with the proposal of the present Pakatan Harapan government to establish the Hindu Endowment Board. The view that Hindu temples and Hindu temple managements could be controlled through the Hindu Endowment Board (HEB) is not the solution to the issue faced by the temples.

Earlier, on 19 May 2018, Malaysia Hindu Sangam had called for a meeting with the Hindu Advisory Board, prominent Hindu organizations and Hindu temples for a discussion on the proposed HEB. During the meeting, it was unanimously decided that MHS will spearhead the protest against the formation of HEB in any other states. Following this, a memorandum was submitted to the Prime Minister’s Department and YB Kulasegaran, Minister of Human Resources.

In Malaysia, though Islam is a major religion, other religions are allowed to practice their religion. According to the Department of Statistics Malaysia, among other religions, Buddhists make up 19.8%, Christians 9.2%, and Hindus 6.3%. When there is no government intervention in any other religion or places of worship, why the Hindu religion, which is the smallest group alone should be subjected to control?

Since 1964, MHS as the mother body for the Hindu temples and organizations had fought to protect the religion and the rights of the Hindus. For the past 54 years, MHS has been performing the duties for regulating Hindu temples and Hinduism practices in Malaysia. The only impediment which MHS is facing is the lack of regulatory and enforcement powers.

In 2013, MHS released the Hindu Temple Guidelines which was again enhanced in 2017. The Temple Guidelines spelled out in no uncertain terms the dos and don’ts in building and managing the temples. MHS also has played a pivotal role in resolving many temple disputes. For years, MHS has appealed to various government agencies such as t

he Registrar of Societies to consult MHS before registering a Hindu temple or organizations as well as during disputes. Therefore, if MHS is appointed as the regulatory body for the temples, then, many of the temple issues can be resolved amicably and a proper measure of control can be exercised.

MHS is the only Hindu representative body in the Malaysian Consultative Council of Buddhism, Christianity, Hinduism, Sikhism, and Taoism or popularly known as MCCBCHST. MCCBCHST is composed primarily of officials from the main non-Muslim faith communities in Malaysia and acts as a consultative and liaison body towards more open dialogue and co-operation. It must be noted that all the other components of the MCCBCHST are also not in favor of any government intervention or control over their places of worships.

Furthermore, the proposed model of Penang Hindu Endowment Board (PHEB) itself has many flaws. The PHEB is under the full control of the State Government. The appointment of the management committees of the temples under the PHEB are not elected by the Hindu community but appointed by the state government. The Hindus or the members of the temples have no say in the management. If such Endowment Board were to be formed in other states, a similar situation will happen where all the temples and its properties will come under the control of the government. What will be the fate of the temples if, later, a new government came into power? What if there was a change of leadership? What if a religious government takes over?

Let the Malaysian Indians remember the fate of the South Indian Labour Fund (SILF). The previous government dissolved the SILF and utilized the funds to establish the Institut Latihan Perindustrian Arumugam Pillai at Nibong Tebal. However, today, Indians have nothing to claim their own in this Institute! Can anyone give assurance that once the temple funds and properties were taken over by the HEB, similar injustice will not occur?

The present tension created over the Batu Caves Temple management, though necessary, however, should be resolved with a proper inquiry. The Trustees’ of the temple, as well as MHS, must be consulted to resolve the issue amicably. It is regrettable that some parties want to show their dissatisfaction over the Batu Caves Temple management by suggesting control of all Hindu temples. There are many temples that are functioning properly and contributing to the community. Such temples too may be affected if the HEB came into existence.

As a mother body for the Hindus, MHS will never agree to let our religion at the mercy of any non-Hindus or even to the politicians. It is our fundamental rights to manage our places of worship!

Therefore, MHS urge the government to look into this matter seriously and call for an open discussion with all the stakeholders and MHS before deciding whether HEB is necessary for Malaysian context. MHS also urge the government to look into a long-term solution, mindful of the constitutional rights of the Hindus to practice their religion freely.

DATUK RS. MOHAN SHAN PMW., JMW.,AMK., BKM., PJK

National President

Malaysia Hindu Sangam


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s