சனாதன தர்மம் – உள்ளது உள்ளபடி


சிவ சிவ
திருச்சிற்றம்பலம்

*சனாதன தர்மம் – உள்ளது உள்ளபடி… பாகம் 19*

*”வேத கால வாழ்வியல் தர்மம்” – பாடம் 4*

பொதுவாக ஆரியர்களின் பண்டையகால வாழ்க்கை முறையை சற்று உன்னிப்பாக கவனித்தால், அவர்கள் நிரந்தரமாக ஒரே இடத்தில் வாழ்பவர்கள் அல்ல என்றே கருதலாம்…

கால்நடைகளை மேய்பதற்காக புல் உள்ள பகுதிகளை நோக்கி பயணப்பட்டு கொண்டிருப்பவர்கள் என்பது தெரியவரும்…

நாடோடிகளாக இருக்கும் மக்கள் கூட்டத்தில் உடல் உழைப்பு செய்பவர்களுக்கும் காவல் காக்கும் வீரர்களுக்கும் தான் மதிப்பு மரியாதை இருக்குமே தவிர சடங்குகள் புரியும் உடல் உழைப்பு இல்லாத மனிதர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இராது…

அதாவது அவர்கள் விரும்பதகாத சுமையாகவே கருதப்படுவார்கள்… ஆரியர்கள் கால்நடைகளை நம்பி வாழ்க்கை ஓட்டியவர்கள் என்பதினால் நிரந்தரமான வேளாண்மையை நிச்சயம் அவர்கள் செய்திருக்க வாய்ப்பு இல்லை…

எனவே குறைந்த பட்சம் ரிக்வேத காலத்தில் மட்டுமாவது ஜாதி வேற்றுமைகள் பாராட்டப்பட நடைமுறை சாத்தியமில்லை என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் போது உணர முடிகிறது…

கால்நடைகளை நம்பியே வாழ்க்கையை ஓட்டிய ரிக்வேத கால மக்கள் அதிகப்படியான தாவர தானிய பழங்கள் உணவுகளையும், ஒரு சாரார் மாமிச உணவுகளையே கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்…

ரிக்வேத ஆதாரப்படி திருமண சடங்குகள் யாகங்கள் போன்ற வழிபாட்டு நிகழ்வுகளின் சைவ விருந்துகளே அதிகம் இருந்ததை அறிய முடிகிறது…

*செல்வத்தின் இருப்பிடமான பசுவை கொல்வது பாவம் என்ற பொருளில் “அகணியா” என்ற வார்த்தை ரிக்வேதத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பல இடங்களில் அறிய முடிகிறது…*

மாமிசம் தவிர பார்லி, அரிசி, யவம் போன்ற தானியங்கள் பிராதான உணவாகவும் இருந்து இருக்கிறது…

பால், தயிர், வெண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவைகளும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது…

போதை தருகின்ற சோம பானம், சுறா பானம் போன்றவைகள் விருந்து காலங்களில் ஏகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது…

நகைகள் அணிவதில் இந்தியர்களுக்கு எப்போதுமே அலாதியான ஆர்வம் உண்டு… இந்திய மண்ணின் தன்மையே பொன்னின் மீது ஆசையை வரவழைத்து விடும் போல… இதற்கு ஆரியர்கள் மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன…?

ஆரிய ஆண்களும் பெண்களும் கழுத்திலும், காதிலும் கையிலும், மூக்கிலும் ஏன் தலைமுடியிலும் கூட தங்க ஆபரணங்களை அணிந்து அழகு பார்த்திருக்கிறார்கள்…

தாடி, மீசை வைத்த ஆண்களும், மழுங்க சிரைத்த ஆண்களும் இப்போது போலவே அப்போதும் இருந்திருக்கிறார்கள்…

பெண்கள் மலர்களால் தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்…

மெல்லிய ஆடைகளும், கம்பளி ஆடைகளும் அவர்களின் உடையாக இருந்திருக்கிறது…

ரிக்வேதகால ஆண்களும், பெண்களும் நடனமாடுவதில் வல்லவர்கள்… வீணை, புல்லாங்குழல், முரசு போன்ற இசை கருவிகள் அவர்களின் இனிமையான வாய்பாட்டிற்கு மெருகூட்டி இருக்கின்றன… தேரோட்டம், குதிரை சவாரி அவர்களின் பொழுது போக்கு…

ரிக்வேதகால மக்கள் சிறந்த மருத்துவ அறிவு பெற்றவர்கள்… விஸ்பலா என்பவன் கால்கள் துண்டிக்கப் பெற்றபிறகு செயற்கை கால்கள் பொருத்தியதாக ரிக்வேத பாடல் ஒன்று சொல்வதை வைத்து பார்க்கும் போது நமக்கே ஆச்சர்யம் வருகிறது…

அறுவை சிகிச்சை செய்வதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்காவிட்டால் நிச்சயம் செயற்கை கால் பொருத்த முடியாது…

மருத்துவ தேவதைகளான அஸ்வினி குமாரர்கள் பல நோய்களுக்கான அரிய மருந்து வகைகளை அடுக்கடுக்காக சொல்லி யிருக்கிறார்கள்…

யசஷ்மா என்ற நோய் பற்றி வேதம் அடிக்கடி சொன்னாலும் அந்த நோயின் பாதிப்பு என்பது நமக்கு முழுமையாக தெரியவில்லை…

அவர்களின் மருத்துவத்தை பற்றி பேசப் போனால் ஏராளமான பக்கங்கள் செலவாகும்…!

– சனாதன தர்மம் தொடரும்…
(இப்பதிவினை பிற குழுவினருக்கும் பகிரவும்…)

*நல்லதே நடக்கும்*
முருகா சரணம்
திருச்சிற்றம்பலம்

தொகுப்பு :

அடியேன்,
*~ மா.முருகன் கிருஷ்ணகுமாரி*
(தேசிய சமயப்பிரிவு, மலேசிய இந்து சங்கம்)


 

சிவ சிவ
திருச்சிற்றம்பலம்

*சனாதன தர்மம் – உள்ளது உள்ளபடி… பாகம் 27*

*”அக்னி குண்டத்தில் வளர்ந்த ஞானம்…” பாடம் 5*

*ரிக் வேதத்தின் ஐந்தாம் மண்டலத்தில்* சூரியனை பற்றி சொல்லப்பட்டிருப்பதை பார்ப்போம்…

வேத ரிஷி சூரியனை துதிக்கும் போது அவனுக்கு பல பெயர்களை சூட்டி மகிழ்கிறான்… சூரியனை இருட்டின் பகைவன் என்றும் மனிதச் சோம்பலின் எதிரி என்றும் பாராட்டுகிறான்…

சூரியனை சோம்பலின் எதிரியாக காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது…

வேதகால மனிதன் சோம்பி இருக்க முடியாத நிலையில் இருந்தான்… பகைவர்களிடமிருந்தோ கொடிய மிருகங்களிடமிருந்தோ சதாகாலமும் அவனை அபாயம் துரத்திக் கொண்டே இருந்தது…

சூரியன் மறைந்து விட்டால் அவனது அச்ச உணவு அதிகபட்டது; பாதுகாப்புணர்வு இன்னும் அதிகமாக தேவைப்பட்டது…

அதனால் அவன் இருட்டை வெறுத்தான்; இருட்டை கிழித்தெரியும் பகலவனை வரவேற்றான்; ஒளி தருகின்ற அனைத்து பொருட்களையுமே தனது நண்பனாக கருதி அன்பு செலுத்தினான்; ஆராதனை செய்தான்…

இந்த உணர்வுகளை சூரியனை பற்றிய ரிக் வேதப் பாடல்கள் தெளிவாக காட்டுகிறது…

சூரிய தேவன் எல்லாம் தெரிந்தவன்; சகல சக்திகளும் வாய்க்கப் பெற்றவன்; பலவாறு வடிவம் கொண்ட உயிர்கள் அனைத்திற்கும் போதனை செய்யும் ஆசிரியரை போன்றவன்; மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் அவன் உணவளிப்பவன்…

வைகரை பொழுதின் இவன் தலை உயர்த்தி பார்த்து விட்டாலே, மனித மனங்கள் இன்பத்தின் எல்லையை தொட்டுவிடுகிறது. பசியை நீக்கும் நேரத்தை மட்டும் சூரியன் தருவதில்லை… ஞானமும் அறிவும் ஆற்றலும் பெறுகின்ற பொழுதையும் சூரியன் தருகிறான்…

சூரியனின் ஞானக் கதிர்கள் மனநிலத்தை ஆழ உழுது அறிவு பயிர்களை விதைக்கிறது… இதனால் புத்திசாலிகள் சூரியனை ஆராதிக்கிறார்கள்; தெய்வீகமான எண்ணங்களை வளர செய்பவன் மனச்சோர்வுகளை போக்க செய்பவனும் தானியங்களை செழிக்க செய்பவனும் சூரியனே ஆவான் என்று சூரியனை போற்றும் இந்த பாடல் மேலோட்டமாக பார்க்கும் பொழுது சாதாரணமாக நமக்கு தெரியும்…

ஆழமான சிந்தனையை செலுத்தினால் ஆதிகால இந்து எத்தகைய நுட்பம் வாய்ந்தவனாக இருந்தான் என்பது நன்கு புலப்படும்…

வைகரையில் சூரிய தரிசனத்தை பெறும்படி வேத ரிஷி ஏன் வற்புறுத்துகிறான்?

அந்த நேரம் மனிதனின் உடலும் மனமும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கக் கூடியதாக இருக்கிறது… சூரிய கதிர்கள் கண்களிலும் உடல் முழுவதும் அந்த நேரம் பரவினால் மனிதனின் அறிவாற்றல் பலமடங்கு கூடும்; சிந்தனையின் வேகம் செழுமைபடும்; எதையும் துணிந்து செய்யக் கூடிய மன தைரியம் அதிகரிக்கும்; உடலிலுள்ள மாசுகள் அழிந்து ஆரோக்கியம் பெருகும்; இந்த உண்மையை அவன் அறிந்து பாடினானா அறியாமல் பாடினானா என்பது முக்கியமல்ல…

இந்த பாடல் வரிகள் சூரிய சக்தியை நமக்கு அதிகபடுத்தி தருவதாக இருப்பது அறிவியல் உண்மையாகும்…

இனி சமுதாய சிந்தனைகளை கொண்ட ரிக் வேதத்தின் ஆறாவது மண்டலத்தை பார்ப்போம்…!

– சனாதன தர்மம் தொடரும்…
(இப்பதிவினை பிற குழுவினருக்கும் பகிரவும்…)

*நல்லதே நடக்கும்*
முருகா சரணம்
திருச்சிற்றம்பலம்

தொகுப்பு :

அடியேன்,
*~ மா.முருகன் கிருஷ்ணகுமாரி*
(தேசிய சமயப்பிரிவு, மலேசிய இந்து சங்கம்)


சிவ சிவ
திருச்சிற்றம்பலம்

*சனாதன தர்மம் – உள்ளது உள்ளபடி… பாகம் 28*

*”அக்னி குண்டத்தில் வளர்ந்த ஞானம்…” பாடம் 5*

இனி சமுதாய சிந்தனைகளை கொண்ட ரிக் வேதத்தின் ஆறாவது மண்டலத்தை சுருக்கமாக பார்ப்போம்…

சமூகம் என்பது ஆண்களையும் பெண்களையும் கொண்டது மட்டுமல்ல… குழந்தைகளையும், முதியவர்களையும், பல மற்றவர்களையும், நோயாளிகளையும் கொண்டதே ஆகும்…

பலசாலிகள் அப்படிப்பட்ட பலஹீனர்களை காப்பாற்ற வேண்டும்; உணவளித்து பாதுகாக்க வேண்டும் என்று ரிக் வேதம் வலியுறுத்துகிறது…

ஆறாவது மண்டலம் 75-வது சூத்தகம்… *சமூகத்தை நேசி, அதற்கு மதிப்பு கொடு, பசியால் வாடுவோருக்கு ஆகாரம் கொடு, சிரமத்தில் சிக்கியோன் துன்பத்தை போக்க போராடு, அதற்காக உனது சக்தியை பெருக்கிகொள், ஆற்றலை வளர்த்துக் கொள், உனது கௌரவத்தை திரட்டிக்கொள், உயர்ந்த செயலுக்காக உன்னிடமுள்ள துணிச்சல் உச்ச நிலையை அடையட்டும்…*

*உனது கைகளிலுள்ள ஆயுதங்கள் எதிகளை மட்டுமல்ல, அதர்மத்தையும் சாய்க்கும் ஆற்றலை பெறும் வண்ணம் பயிற்சி எடுத்துக்கொள்…*

*தர்மத்திற்கு மாறானவைகளிடமும் எதிகளிடமும் நிமிர்ந்து நிற்க்கும் சுபாவத்தை வளர்த்துக் கொள்… மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பண்பை பெறுக்கி கொள்* என்றெல்லாம் மனிதனுக்கு தன்முனைப்பு அறிவுரைகள் தருகிறது…!

அடுத்ததாக முழுமுதற்கடவுளான விஷ்ணுவை பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலத்தை பார்ப்போம்…

இந்த இடத்தில் ஒரு உண்மையை அடியேன் கூறுகிறோம்… நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்…

*வேத பாடங்களில் எந்த இடத்திலேயும் விஷ்ணுதான் மூலப்பரம் பொருள் என்று குறிப்பிடப்படவில்லை…!*

இந்திரன் வருணன் போன்ற தெய்வங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற முக்கியத்துவம் கூட கொடுக்கப்படவில்லை… விஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால்தான் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்ற கருத்து வேதகாலத்திற்கு பின்பு வந்ததே ஆகும்…

உபநிஷதங்களின் சாரமாக கருதப்படும் வேதாந்தம் என்பது நடைமுறைக்கு வந்த பிறகுதான், விஷ்ணு பரம்பொருளாகக் கருதப்பட்டு வைணவ சம்பிரதாயத்தில் முதல் தெய்வமாக உயர்த்தப்படுகிறார் என்பதுவே உண்மை…!

இப்படி வேதத்தில் விஷ்ணுவை பிரதானபடுத்தாமைக்கு வேறொரு காரணத்தையும் கூறலாம்…

வேத பாடல்கள் அனைத்துமே ஒருவரால் உருவாக்கப்படவில்லை, ஒரே காலகட்டத்திலும் ஆக்கப்படவில்லை…

பல ரிஷிகளால் பல காலத்தில் அறியபட்டதே வேதபாடல்களின் தொகுப்பாகும்… எனவே ஒவ்வொரு பாடலும், தான் போற்றும் தெய்வமே சிறந்தது உயர்ந்தது இணையற்றது என்று கருதுகிறது…

அதனால் மற்ற தெய்வங்களை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், விஷ்ணுவை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதனால், வேதத்தில் விஷ்ணுவின் தரம் தாழ்த்தபட்டிருப்பதாக கருத இயலாது…

*இந்திய தத்துவங்கள், சிந்தனை மரபுகள், சனாதன தர்மம் கோட்பாடுகள் உருவாக வேதங்கள் பாதைகளை மட்டுமே அமைத்து கொடுத்து இருக்கிறது… மற்றபடி உள்ள வளர்சிகள் அனைத்துமே உபநிஷதங்களாலும் இதிகாச புராணங்களாலும் ஏற்படுத்தப்பட்டிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால் எந்த குழப்பம் ஏற்படாது…!*

இனி விஷ்ணுவை பற்றிய வேத வரிகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்…!

– சனாதன தர்மம் தொடரும்…
(இப்பதிவினை பிற குழுவினருக்கும் பகிரவும்…)

*நல்லதே நடக்கும்*
முருகா சரணம்
திருச்சிற்றம்பலம்

தொகுப்பு :

அடியேன்,
*~ மா.முருகன் கிருஷ்ணகுமாரி*
(தேசிய சமயப்பிரிவு, மலேசிய இந்து சங்கம்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s