இந்து சமயத்திற்கு ஏன் இத்துணை துயரங்கள்


http://imvickraman.blogspot.com.br/2017/09/blog-post_13.html?m=1

September 13, 2017

இந்து சமயத்திற்கு ஏன் இத்துணை துயரங்கள்

சமீபத்தில் வளைத்தளங்களில் அடியேன் கண்டு அதிர்ச்சியுற்ற சம்பவம் ஒன்றை இங்கு பகிர்கிறேன். பக்தியேன்ற பெயரில் பலரும் பல விதமாக தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி வந்தாலும் அவற்றில் சில நம் சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதை கண்டு மனம் வேதனை கொள்கிறது. இப்பொழுது நான் கண்ட சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் பெண்கள் தங்களை அம்மனின் சொரூபமாக மாற்றி கொண்டு அங்காரமாக கூச்சலிட்டு கொண்டும் பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.

பெண்கள் பொதுவாக அம்மனுக்கு ஒப்பானவர்கள் தான் அதில் என்ற மாற்றமும் இல்லை. ஆனால் இவர்கள் நடந்து கொள்ளும் செய்கையை பார்த்தால் நம் சமய நம்பிக்கைக்கு அவமானத்தை ஈட்டித்தருவதாக இருக்கிறது. நாம் கற்றும் முட்டாள்களாக திரிகிறோமோ? அன்பின் வழி இறைவனை அடைந்திட தான் நம் சமயக் குரவர்கள், நாயன்மார்கள், மற்றும் அருளாளர்களும் போதித்துள்ளனர். பெரியப்புராணத்தில் கூட நாயன்மார்கள் இத்துணை பக்தியில் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தவில்லை.

காலங்களின் தாக்கத்தால் மூடர்களின் அர்த்தமற்ற போதனைகளால் இது போன்ற காரியங்கள் இன்னும் நமது சமுதாயத்தில் நடந்து கொண்டு தான் வருகிறது.

இதுமட்டும் தான் சமயத்தை சீர்குழைய செய்கிறது என்பது  என் கருத்து அல்ல. இன்னும் பல உண்டு. பைரவர் வழிப்பாடு என்று காய்கறிகளால் விளக்குகள், குரு வழிப்பாடு என்று பண மோசடி, கடவுளுக்கு நிகரான யாக வேள்வி வழிப்பாடுகள்,ஜோதிட பரிகாரங்கள் என்று இன்னும் பல மூட்டாள் தனமான காரியங்கள் அங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.


இந்து சமயத்தில் போதிக்கப்பட்ட வழிப்பாட்டு முறைகள் அத்தனையும் விஞ்ஞானத்திற்க்கும் மெய்ஞ்ஞானத்திற்க்கும் ஒத்து போகும் வகையில் அமையப் பெற்றவை. இன்றும் விஞ்ஞானிகளும், அறிவியல் நிபுணர்களும் நமது சமய சம்பிரதாயங்களை ஆராய்ந்து அவை உலகிற்கு எல்லா காலங்களிலும் பல நன்மைகளை வழங்க கூடியதாகத்தான் உள்ளது என்று சான்றுகள் காட்டப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் மூடநம்பிக்கையில் தோன்றும் சம்பிரதாயங்களுக்கு இவர்களால் தகுந்த விளக்கமளிக்க முடியுமா? மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று முழக்கமிட்டால் மட்டும் போதாது. அதற்கான முயற்சியில் முழுமையாக இறங்கி செயல் பட வேண்டும். உண்மையான பக்தி மார்க்கத்தை முழுமையாக கைப்பற்றல் வேண்டும். சனதான தர்மத்தை தெளிவுப்படுத்தி கொள்ள முற்ப்படுவது அவசியமாகிறது. சரியான இந்து சமயத்தை கற்று தெளிந்து விட்டால் எவராலும் நம்மை மூடர்களாக்கி விட முடியாது என்பதை எப்பொழுதும் சிந்தையில் கொண்டிருப்பது சிறப்பு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s