SJKT Ladang Nyior, Kluang Johor


Datuk Seri Dr S.Subramaniam Menteri Kesihatan merangkap Presiden MIC telah menyempurnakan majlis perletakan batu asas pembinaan bangunan baru SJKT Ladang Nyior, Kluang Johor. Beliau berkata kerajaan sedang berusaha memindahkan 22 Sekolah Jenis Kebangsaan Tamil (SJKT) yang kekurangan murid ke kawasan berkeperluan tinggi khususnya di kawasan bandar. Pemindaan ini merupakan agenda MIC dalam meningkatkan mutu pendidikan bahasa Tamil di negara ini.

Pembinaan bangunan baharu SJKT Ladang Nyior di tanah seluas 2.6 hektar,dengan kos RM 3.5 juta bakal menampung kemasukan murid kepada 150 orang apabila dibuka berbanding hanya dua murid ketika ini. Pembinaan sekolah baru ini dengan 12 bilik darjah dijangka siap akhir tahun 2019 . Permindahkannya di buat supaya bilangan murid dapat ditingkatkan memandangkan terdapat beberapa penempatan di kawasan ini termasuk Kampung MIC.

Beliau turut mengulas, kebanyakan SJKT yang mempunyai kurang dari 10 murid terletak di kawasan ladang kerana ramai yang telah berpindah ke bandar. Sebanyak 22 SJKT itu perlu dilakukan secara berperingkat memandangkan kerajaan berdepan beberapa cabaran terutamanya mendapatkan tanah dan mengambil kira kos pembinaan.

Justeru itu, memindahkan SJKT ini ke kawasan lebih sesuai di bandar terutamanya di kawasan yang memerlukan lebih daripada sebuah SJKT akibat murid yang ramai. Beliau, meminta masyarakat memahami isu perpindahan SJKT tersebut dan bekerjasama menjayakan perpindahan ke kawasan lebih sesuai demi memartabat pendidikan..

மாணவர்களுக்கு மேலும் சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில் அரசாங்கம் நாடு முழுவதும் பத்துக்கும் குறைந்த மாணவர்களுடன் செயல்படும் 22 தமிழ்ப்பள்ளிகளை வேறு இடங்களுக்கு மாற்றவிருக்கிறது. அந்த வகையில் இரண்டு மாணவர்களுடன் செயல்படும் குளுவாங் நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி அருகே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று நடைபெறுவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு ஆகியவற்றை தனது தலையாய பணியாக கொண்டு ம இ கா செயல்பட்டு வருகிறது. தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்ற விவகாரத்தை இந்தியர்கள் ஆக்ககரமான முறையில் அணுக வேண்டும். பள்ளிகளைப் பழைய இடத்திலேயே நிலை நிறுத்த வேண்டும் எனும் உணர்வை கைவிட்டு, புதிய இடத்தில், புதியப் பள்ளி, புதியத் தோற்றத்தில் உருவாவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டத்தோஸ்ரீ பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

இப்புதியத் தமிழ்ப்பள்ளி மாநில அரசாங்கம் வழங்கியுள்ள 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும். இதற்காக மத்திய அரசாங்கம் 3.5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இங்கு 12 வகுப்பறைகளுடன் இதர கற்றல் கற்பித்தல் வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என ம இ கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் மேலும் கூறினார்.

இன்று, குளுவாங்கில் நியோர் புதியத் தமிழ்ப்பள்ளிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தொடக்கக் காலத்தில் தோட்டங்களில் குடியேறிய இந்தியர்கள் இன்று நகர் மற்றும் நகரை ஒட்டிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதனால் தோட்டப்புறப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அப்பள்ளிகளை மாணவர்கள் அதிகமாக உள்ள இடங்களுக்கு மாற்றும் முயற்சியில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் அதில் ஒன்று. இப்பள்ளியின் கட்டுமானப் பணி இன்னும் 24 மாதங்களில் பூர்த்தியாகும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில், கல்வித் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், ஜோகூர் மாநில ம இ கா தலைவர் டத்தோ எம். அசோஜன், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ வித்தியநாதன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s