MALAYSIA HINDU SANGAM – RAWANG LOCAL COUNCIL


Kalvi yathirai 2016


Kalvi yathirai 2016 preparation


WhatsApp Image 2016-08-12 at 2.45.31 PM.jpeg

Please pre register your children for Kalvi Yaathirai Rawang.* Click on the link below:
https://goo.gl/forms/rEWv1Gmle5FOaHYi1

WhatsApp Image 2016-08-26 at 8.16.14 AM.jpeg


SELANGOR STATE THIRUMURAI


Kalviyathirai 2016  4th meeting 11/08/2016


Saturday 13/08/2016

Dear Friends ,
In conjunction with AADI MONTH FESTIVAL,
Our Committee Member Mr Sree Murugan’s group will be conducting Amman Bhajan Songs at Dewi Sri Karumariamman Temple Kampung Terentang today at 8.00pm.
All members are kindly invited to join today’s prayers. 🙏Aum Sakthi.


Thevaram class at sri veerakathy vinayagar temple 13/08/2016

WhatsApp Image 2016-08-13 at 10.15.30 AM


Vanakkam team ,pls join today’s Saint Sunthramoorthy nayanar’s Guru Pooja at sg terentang SRI KARUMARIAMMAN TEMPLE.Guruva thunai.OM NAMASIVAYA

WhatsApp Image 2016-08-09 at 9.12.42 AM

Guru Poojai at Dewi Sri Karumariamman Temple Kg.Terentang 09/08/2016


RAWANG LOCAL COUNCIL THIRUMURAI VIZHA 07/08/2016 AT SRI VEERAKATHY VINAYAGAR TEMPLE


012 4921791 Govindaraj   Today Samaiya kuravar Manikkavasagar Guru  8.7.16.. MHS (Rawang) members accordingly  invite  you & your family



PREPARATION FOR SPM SEMINAR


WhatsApp-Image-20160613


A friendly reminder. There will be a joint meeting today( 30/5/16) at 8.30 p.m. at MMA temple regarding spm seminar. The project coordinators  Mr Kavi n Mr Nathanrajwill attend the meeting. Excos r welcome to join the meeting too.t.q


ரவாங் வட்டார நிகழ்வுகள் 2015/2016

19/03/2015  – முதலாவது வட்டாரப் பேரவைக் கூட்டம்.

22/03/2015  – இடுகாடு பிரச்சனைகள் கூட்டம் – தேசியப் பேரவை கட்டிடம்.

குறிப்பு:

  1. இடுகாடுகளையும், அவற்றை நிர்வகிக்கும் தரப்பினரையும் அடையாளம் காணுதல்.
  2. இடுகாடுகளின் உண்மையான எண்ணிக்கையை கணெக்கெடுத்தல்.
  3. அனைத்து நிர்வாகத்தினரையும் ஒரு குடையின் கீழ் இணைத்தல்.
  4. இடுகாடு வழிகாட்டி கையேடு தயாரித்தல்.
  5. இறுதிகடன்களை செய்வழிமுறை கையேடு தயாரித்தல்.

29/03/2015  – சிலாங்கூர் மாநில ஆலய மாநாடு

03/04/2015  – கூட்டுப் பிரார்த்த்னை

திரு. அசோக் குமார் & திருமதி தேவி அவர்களின் இல்லம், தாமான் காஸ்ஸியா, ரவாங்.

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 9.30 மணி

ஏறக்குறைய 15 பேர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். திரு ஸ்ரீ முருகன் & திரு.

வெற்றிவேல் அவர்கள் இருவரும் தேவாரம், திருமுறை மற்றும் சமய சொற்பொழிவுடன்

இந்நிகழ்வை வழிநடத்தினர்.

14/04/2015  – தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்.

 ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், ரவாங்.

தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம், ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக

நடந்தேறியது. இதில் மலேசிய இந்து சங்க, ரவாங் வட்டாரப் பேரவையின் நிர்வாகத்தினர்

மற்றும் அவர்தம் குடும்பத்தினருடன் கலந்து கொண்டணர். மாலை வேளை பூஜைக்கு

பொதுமக்கள் திரளாக வந்து கலந்து கொண்டார்கள். வட்டார பேரவையின் சார்பில்

அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

23/04/2015  – தாய்லாந்து சுற்றுலா.

ரவாங் வட்டார பேரவையின் துணைப்பொறுளாளர் திரு.வெற்றிவேல் தலைமையில்,

தாய்லாந்துக்கான 3 நாள் 2 இரவு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமார் 20

குடும்பங்கள் கலந்துகொண்டனர். இப்பயணத்தில் தாய்லாந்தில் உள்ள பல இந்து

கோவில்களை தரிசனம் செய்தார்கள்.

06/05/2015  – 2வது வட்டாரப் பேரவை கூட்டம்.

அலுவலகம், ஸ்ரீ மகா மாரியம்மன், தாமான் முஹிப்பா, ரவாங்

07/05/2015  – நேப்பாள பேரிடர் உதவி.

நேப்பாள பேரிடர் துயரத்திற்காக, வட்டார சங்கத்தின் சார்பில் ரி.ம.3000 மற்றும் போர்வைகள், துணிமணிகள் போன்றவை சேகரிக்கப்பட்டு, தலைவர் திரு.பத்மநாதன் அவர்கள் டாக்டர்

ரூபா சாமிநாதன் அவர்களிடம் ஒப்படைத்தார்.

10/05/2015  – ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், செரென்டா – ஆண்டுக்கூட்டம்

செரென்டா ஆலயத்தின் மண்டபத்தில் நடைப்பெற்ற இந்த ஆலய ஆண்டுக்கூட்டத்தில்,

சுற்றுவட்டார பக்த பெருமக்களும் திரளாக வந்து கலந்துகொண்டார்கள்.

12/05/2015  – திருநாவுக்கரசர் குரு பூஜை

ஸ்ரீ மகா மாரியம்மன், தாமான் முஹிப்பா, ரவாங்

‘நால்வர் பூஜை’ நிகழ்வின் முதல் அங்கமாக சமயக்குரவர் திருநாவுக்கரசர் சுவாமிகளின்

குருபூஜை, ரவாங், தாமான் முஹிப்பா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பாக

நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டார பெருமக்கள் சிரமம் பாராது கலந்து கொண்டனர். ஆலய

நிர்வாகமும் இந்நிகழ்வுக்கு பெரும் ஆதரவு தந்தனர்.

19/05/2015   – புக்கிட் பெருந்தோங்கில், திரு. ரவி அவர்கள் அகால மரணமடைந்ததால், இறுதி சடங்கு செய்வதற்கு பணப்பற்றாக்குறையில் திண்டாடிய குடும்பத்திற்கு திரு.வெற்றிவேல் அவர்கள்,

ரவாங் மற்றும் செந்தோசா சங்கங்களின் சார்பாக, ரி.ம.500 வழங்கினார்.

நன்கொடையாளர்கள் :-

1) திரு. நாதன் & குடும்பத்தினர்           ரி.ம. 100.00

2) திரு. மேஜர் கதிரேசபதி & குடும்பத்தினர்       ரி.ம. 100.00

3) திரு. பாலகிருஷ்ணன் & குடும்பத்தினர் ரி.ம. 100.00

4) திரு. வெற்றிவேல் & குடும்பத்தினர்     ரி.ம 100.00

5) திரு. சுப்பிரமணியம் & குடும்பத்தினர்    ரி.ம 100.00

30/05/2015  – கூட்டு பிரார்த்தனை, கிரீன் பார்க், ரவாங்

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 9.30 மணி

ஏறக்குறைய 20 பேர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். திரு ஸ்ரீ முருகன் & திரு.

வெற்றிவேல் அவர்கள் இருவரும் தேவாரம், திருமுறை மற்றும் சமய சொற்பொழிவுடன்

இந்நிகழ்வை வழிநடத்தினர்.

31/05/2015  – சிலாங்கூர் மாநில ஆண்டுக்கூட்டம்.

டேவான் ஜூப்ளி பேராக், சிலாங்கூர்

மலேசிய இந்து சங்கம், சிலாங்கூர் மாநிலப் பேரவையின் ஆண்டுக்கூட்டம், சிலாங்கூர் மாநில

அரசாங்க கட்டிடத்தில் சிறப்பாக நடந்தது. இக்கூட்டத்திற்கு வட்டாரத்தின் சார்பாக பலரும்

கலந்து கொண்டனர். புதிய மாநில நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

04/06/2015  – திருஞானசம்பந்தர் குரு பூஜை

 ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், 16வது மைல், ரவாங்.

‘நால்வர் பூஜை’ நிகழ்வின் இரண்டாம் அங்கமாக சமயக்குரவர் திருஞானசம்பந்தர் சுவாமிகளின்

குருபூஜை, ரவாங், 16வது மைல், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பாக

நடைப்பெற்றது. இதில் வட்டார செயலவை உறுப்பினர்களும் சுற்றுவட்டார பெருமக்களும்

கலந்து கொண்டனர். ஆலய நிர்வாகம் இந்நிகழ்வுக்கு பெரும் ஆதரவு தந்தனர்.

14/06/2015  – மாநில திருமுறை நடுவர் பயிற்சி

தேசிய பேரவை கட்டிடம்.

வருகின்ற மாநில திருமுறை நிகழ்வையொட்டி, மாநில திருமுறை நடுவர் பயிற்சி, மலேசிய

இந்து சங்கம் தேசிய பேரவை கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில்

மாநிலத்திலுள்ள பல வட்டாரங்களிலிருந்தும் நடுவர்கள் வந்து கலந்துகொண்டார்கள். ரவாங்

வட்டார செயலவை உறுப்பினர் திரு. ஸ்ரீ முருகன் அவர்கள் முதன்மை நடுவர் குழுவில்

இடம்பெற்றிருந்தார்.

20/06/2015  – கூட்டு பிரார்த்தனை

செயலாளர், திருமதி பார்வதி கைலாசம் அவர்களின் இல்லம், ரவாங்

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 9.30 மணி

இந்த கூட்டு பிரார்த்தனை, திரு.வெற்றிவேல் தலைமையில் நடைப்பெற்றது. திரு. ஸ்ரீ முருகன் மற்றும் திரு. வெற்றிவேல் அவர்கள் திருமுறை தேவாரம் பாட, வந்திருந்தவர்களும் அவ்ர்களோடு பாடி மகிழ்ந்தனர். சுமார் 25 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

21/06/2015  – தேசியப் பேரவையின் ஆண்டுக்கூட்டம்

மருத்துவ கல்வி நிலையம், கோலாலம்பூர்

மலேசிய இந்து சங்கத்தின் தேசியப் பேரவையின் 38வது தேசியக்கூட்டம், கோலாலம்பூரில்

அமைந்துள்ள மருத்துவ கல்வி நிலையத்தில் நடைப்பெற்றது. இதில் ரவாங் வட்டார நிர்வாக செயலாளர்கள், செயலவை உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். தாப்பா ஜெகநாதர் இந்து கல்லூரி கட்டிடத்திற்க்காக நன்கொடைகள் பெறப்பட்டன. ரவாங் வட்டார சங்கத்தின் சார்பாகவும் நன்கொடை உறுதியளிக்கப்பட்டது.

21/06/2015  – மாணிக்கவாசகர் குரு பூஜை

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ரவாங்.

‘நால்வர் பூஜை’ நிகழ்வின் மூன்றாம் அங்கமாக சமயக்குரவர் மாணிக்கவாசகர் சுவாமிகளின் குருபூஜை, ரவாங், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் வட்டார செயலவை உறுப்பினர்களும் சுற்றுவட்டார பெருமக்களும் கலந்து கொண்டனர். ஆலய நிர்வாகம் இந்நிகழ்வுக்கு பெரும் ஆதரவு தந்தனர்.

25/06/2015  – 4வது வட்டாரப் பேரவை கூட்டம்.

முன்னாள் தலைவர், தொண்டர்மாமணி மேஜர் க.கதிரேசபதி இல்லம்.

27/06/2015  – தேவாரம் திருமுறை – திரு. வெற்றிவேல் தலைமையில்

 ஸ்ரீ முனிஸ்வரன் ஆலயம், கம்போங் பெங்காலி, ரவாங்

திரு. வெற்றிவேல் & திரு. ஸ்ரீ முருகன் தலைவையில், கம்போங் பெங்காலியில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனிஸ்வரன் ஆலயத்தில், பஜனை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரவாங் வட்டார பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

02/07/2015  – கூட்டு பிரார்த்தனை

திரு.சுப்பையா இல்லம், ரவாங்

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 9.30 மணி

திரு. வெற்றிவேல் மற்றும் திரு. ஸ்ரீ முருகன் தலைமையில், திரு.சுப்பையா அவர்களின் இல்லத்தில் கூட்டுப் பிரார்த்தனை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நிர்வாகத்தினர் தத்தம் குடுப்பத்தினருடன் வந்து கலந்து கொண்டனர்.

17/07/2015  – தேசிய திருமுறை நடுவர் பயிற்சி.

18/07/2015  சிரம்பான்

தேசிய திருமுறை விழாவையொட்டி, தேசிய திருமுறை நடுவர் பயிற்சி ஒன்று சிரம்பானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு நாள் நிகழ்வில், நாடு தழுவிய அளவில் பல திருமுறை நடுவர்கள் வந்து கலந்துகொண்டார்கள். நமது ரவாங் வட்டாரத்தை பிரதிநிதித்து, திரு. ஸ்ரீ முருகன், திரு.கோவிந்தராஜ் மற்றும் அவரது துணைவியார் திருமதி. தாமரைச்செல்வி அவர்களும் கலந்துகொண்டார்கள்.

 21/07/2015  – 5வது வட்டாரப் பேரவை கூட்டம்.

அலுவலகம், ஸ்ரீ மகா மாரியம்மன், தாமான் முஹிப்பா, ரவாங்

 

26/07/2015  – ரவாங் வட்டாரப் பேரவையின் திருமுறை விழா.

ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், ரவாங்.

மலேசிய இந்து சங்கம், ரவாங் வட்டாரப் பேரவையின் திருமுறை போட்டி விழா மிகவும்அற்புதமாகவும் சிறப்பாகவும் நடந்தேறியது. வட்டார நிர்வாகத்தின் சிறந்த திட்டமிடல் பணி,வந்திருந்த அனைத்து உள்ளங்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்விற்கு முக்கிய பிரமுகர்கள் கான் பெய் யீ (ரவாங் சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் திரு.பழனி (ம.இ.கா. ரவாங் தொகுதி தலைவர்) ஆகியோர் வந்திருந்தது, இந்நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டியது.

இந்த திருமுறை போட்டி, ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. திருமுறையை தவிர்த்து மாறு வேடப் போட்டி, பேச்சுப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி போட்டி என இதர போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றிப்பெற்ற வெற்றியாளர்கள் பரிசுகள் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். பங்கு கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

வட்டாரத்தின் இந்த திருமுறை போட்டி நிகழ்வு வெற்றிபெற, ரன்கொடைகள் அளித்த பல நல்ல உள்ளங்களும், நிகழ்விற்காக ஆலய மண்டபத்தை ஏற்பாடு செய்து கொடுத்த ஆலய நிர்வாகத்தினரு மற்றும் பல முக்கிய இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது. பொதுமக்கள் வருகையும் மிக்க மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

 

02/08/2015  – திருமுறை போட்டி, புக்கிட் செந்தோசா

 தமிழ்ப்பள்ளி, சுங்கை சோ, உலு சிலாங்கூர்

புக்கிட் செந்தோசவில் நடைபெற்ற திருமுறைப் போட்டியில், திரு.ஸ்ரீ முருகன் , திரு.கோவிந்தராஜ் & திருமதி தாமரைச்செல்வி அவர்கள் மூவரும் நீதிபதிகளாக கலந்து கொண்டனர்.

06/08/2015  – கூட்டு பிரார்த்தனை

க்ரீன் பார்க், ரவாங்

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 9.30 மணி

ஏறக்குறைய 15 பேர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். திரு ஸ்ரீ முருகன் & திரு. வெற்றிவேல் அவர்கள் இருவரும் தேவாரம், திருமுறை மற்றும் சமய சொற்பொழிவுடன்  இந்நிகழ்வை வழிநடத்தினர்.

     

09/08/2015  – திருமுறை போட்டி, பத்தாங் பெர்ஜூந்தை

பத்தாங் பெர்ஜூந்தையில் நடைபெற்ற திருமுறைப் போட்டியில், திரு.ஸ்ரீ முருகன்

அவர்கள் தலைமை நீதிபதியாக கலந்து கொண்டார்.

12/08/2015  – இந்து வித்யாலயா பாலர் பள்ளி – திறப்பு விழா

 ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், செரென்டா

இந்து வித்யாலயா பாலர் பள்ளி வெற்றிகரமாக செரென்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்திறப்பு விழா கண்டது. இத்திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்களாக, மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர். எஸ். மோகன் ஷான் மற்றும் இந்து வித்யாலாயா பாலர் பள்ளி ஒருங்கிணப்பாளரான டாக்டர் ரூபா சாமிநாதன் அவர்களும் கலந்து கொண்டனர். ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் சார்பிலும், மலேசிய இந்து சங்கம், ரவாங் வட்டார சார்பிலும், நிர்வாகத்தினர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

13/08/2015  – ஆத்ம சாந்தி பிரார்த்த்னை

 டத்தோ சுரேஷ் இல்லம், தாமான் துன் பேராக், ரவாங்

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 9.30 மணி

டத்தோ சுரேஷ் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது தாயாருக்கான ஆத்ம சாந்தி பிரார்த்த்னை கூட்டத்தில் ஏறக்குறைய 35 பேர் கலந்துக்கொண்டனர். திரு.ஸ்ரீ முருகன் & திரு.வெற்றிவேல் அவர்கள் தேவாரம், திருமுறை மற்றும் சமய சொற்பொழிவுடன் இந்நிகழ்வை வழிநடத்தினர். வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

15/08/2015  – ஆத்ம சாந்தி பிரார்த்த்னை

திரு. மணிராஜ் இல்லம், ரவாங்

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 9.30 மணி

இந்த ஆத்ம சாந்தி பிரார்த்த்னை கூட்டத்தில் ஏறக்குறைய 25 பேர் கலந்துக்கொண்டனர். திரு.ஸ்ரீ முருகன் & திரு.வெற்றிவேல் அவர்கள் தேவாரம், திருமுறை மற்றும் சமய சொற்பொழிவுடன் இந்நிகழ்வை வழிநடத்தினர். வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

16/08/2015  – திருமுறை போட்டி, கோல சிலாங்கூர்

தமிழ்ப்பள்ளி ரிவர்சைட், கோல சிலாங்கூர்

கோல சிலாங்கூர், ரிவர்சைட் தமழ்ப்பள்ளியில் நடைபெற்ற திருமுறைப் போட்டியில், திரு.ஸ்ரீ முருகன் , திரு.கோவிந்தராஜ் & திருமதி தாமரைச்செல்வி அவர்கள் மூவரும் நீதிபதிகளாக கலந்து கொண்டனர்.

18/08/2015  – 6வது வட்டாரப் பேரவை கூட்டம்.

அலுவலகம், ஸ்ரீ மகா மாரியம்மன், தாமான் முஹிப்பா, ரவாங்

 

23/08/2015  – மாநில திருமுறை விழா சிறப்புக் கூட்டம்

மாநில அலுவலகம், கிள்ளான்

மாநிலத்தின் திருமுறை விழாவையொட்டி, மாநில அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விளக்க கூட்டத்திற்கு, ரவாங் வட்டாரத்தைப் பிரதிநிதித்து, திரு.ஸ்ரீ முருகன் மற்றும் திரு.கோவிந்தராஜ் அவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.

30/08/2015  – சிலாங்கூர் மாநிலத்தின் திருமுறை விழா.

சிலாங்கூர் மாநிலத் திருமுறை போட்டியில், ரவாங் வட்டார சார்பில் போட்டியிட்ட மாணவர்தங்கம் வென்றார். அதோடு முதல் நிலை வெற்றியாளர்களாக ரவாங் வட்டார மாணவர்களேபெற்றிருப்பது இன்னும் சிறப்பான விஷயமாகும்.

31/08/2015  – கல்வி யாத்திரை

            ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், கன்றி ஹோம்ஸ், ரவாங்

யூ.பி.எஸ்.ஆர். , பி.எம்.ஆர், எஸ்.பி.எம் மற்றும் எஸ்.தி.பி.எம் தேர்வை எழுதவிருக்கும்மாணவர்களுக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வானது ஒரு பெரிய கூட்டுமுயற்சியாகும். ரவாங் வட்டாரத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ள பல ஆலயங்கள்,இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் இதில் பங்காற்றியுள்ளனர். ரவாங் வட்டார பேரவைவருடா வருடம் இந்த நிகழ்வின் தலைமை குழுவில் இடம்பெற்றிருக்கும்.

இந்த வருட கல்வி யாத்திரை, கன்றி ஹோம்ஸில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின்தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 300 மாணவர்களுக்கும் அதிகமாக கலந்துகொண்டனர். சிறப்பான தேர்ச்சியை வேண்டி பால்குடம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம்செய்தனர். சிவாச்சாரியார் மகேந்திர குருக்கள் இந்நிகழ்வில் சிறப்பானதொரு உரைநிகழ்த்தினார். திரு. ஸ்ரீ முருகன் அவர்கள் தேவாரம் பஜனை திருமுறை பாடி வந்திருந்தவர்களைபக்தி பரவசத்தில் ஆழ்த்தினார்.

விழாவின் இறுதியில் பங்குகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதல்வழங்கப்பட்டது. அதோடு அன்னதானமும் வழங்கப்பட்டது.

08/09/2015  – 7வது வட்டாரப் பேரவை கூட்டம்.

 அலுவலகம், ஸ்ரீ மகா மாரியம்மன், தாமான் முஹிப்பா, ரவாங்

11/09/2015  – உபயம் & கூட்டு பிரார்த்தனை

 ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம், குவாங்.

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 9.30 மணி

ஏறக்குறைய 50 பேர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். திரு ஸ்ரீ முருகன் & திரு.வெற்றிவேல் அவர்கள் இருவரும் தேவாரம், திருமுறை மற்றும் சமய சொற்பொழிவுடன்  இந்நிகழ்வை வழிநடத்தினர். வந்திருந்த பக்தப்பெருமக்களும் இவர்களோடு இணைந்து பாடிமகிழ்ந்தனர்.

12/09/2015  – வட்டார பேரவையின் உபயம் – விநாயகர் சதுர்த்தி (படம் இல்லை)

            ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், ரவாங்.

விநாயகர் சதுர்த்தி நிகழ்வையொட்டி, ரவாங் பட்டணத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வீரகத்திவிநாயகர் ஆலயத்தில், ரவாங் வட்டாரத்தின் சார்பில் உபயம் ஏற்படு செய்யப்பட்டிருந்தது.இதில் வட்டார நிர்வாகத்தினர் பலரும் தத்தம் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டனர்.

16/09/2015  – கும்பாபிஷேகம் – ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயம், சுங்கை பீசி, கோலாலம்பூர்.

புதன்கிழமையன்று, இந்த ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில், ரவாங் வட்டாரத்தைபிரதிநிதித்து நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானபக்த பெருமக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

18/09/2015  – கூட்டு பிரார்த்தனை

            துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இல்லம்.

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 9.30 மணி

ஏறக்குறைய 30 பேர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். திரு ஸ்ரீ முருகன் & திரு.வெற்றிவேல் அவர்கள் இருவரும் தேவாரம், திருமுறை மற்றும் சமய சொற்பொழிவுடன்  இந்நிகழ்வை வழிநடத்தினர். வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

20/09/2015  – தேசிய இந்து சங்கத்தின் திருமுறை விழா.

24/09/2015  – ஆத்ம சாந்தி பிரார்த்த்னை – திரு.வெற்றிவேல்

            தாமான் ஸ்ரீ பாயு, 16 மைல், ரவாங்.

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 10.30 மணி

இந்த ஆத்ம சாந்தி பிரார்த்த்னை கூட்டத்தில் ஏறக்குறைய 20 பேர் கலந்துக்கொண்டனர்.திரு. வெற்றிவேல் அவர்கள் தேவாரம், திருமுறை மற்றும் சமய சொற்பொழிவுடன்  இந்நிகழ்வை வழிநடத்தினார். வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

27/09/2015  – சிலாங்கூர் மாநில ஆலய மாநாடு.

03/10/2015  – திரு.வெற்றிவேல் முயற்சியில் புதிய தேவார வகுப்பு.

அம்மன் ஆலயம், ரவாங் பெர்டானா, ரவாங்.

03/10/2015  – அமரர் திரு. கே.எஸ். மேனன் அவர்களின் ஈமச்சடங்கு.

சங்கத்தின் சார்பில், திரு.பாலகிருஷ்ணன் & திரு.வெற்றிவேல் அவர்கள் தேவாரம் திருமுறை  ஓதி, அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்த்னை செய்தனர்.

04/10/2015  – பஜனை / தேவாரம் – ஸ்ரீ ராமர் ஆலயம், செலாயாங்

இடைநிலைப் பள்ளி மாணவர்கள் பங்குகொண்ட தேவாரம் மற்றும் பஜனை நிகழ்வைதிருமதி பார்வதி கைலாசம் (வட்டார செயலாளர்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில் சுமார் 80 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

08/10/2015  – 8வது வட்டார பேரவைக் கூட்டம்.

 அலுவலகம், ஸ்ரீ மகா மாரியம்மன், தாமான் முஹிப்பா, ரவாங்

11/10/2015  – எஸ். பி. எம் கல்விக் கருத்தரங்கு

மஸ்துரா கல்லூரி, ரவாங்

ரவாங் சுற்று வட்டாரத்திலுள்ள எஸ். பி. எம் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களுக்காகஇந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு தேர்வைஎப்படி எவ்வாறு எதிர்நோக்கவேண்டுமென்று கற்றுத்தரப்பட்டது. இந்த தேர்வு வழிகாட்டிகருத்தரங்கில், சிறந்த ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல விஷயங்களைதெளிவுபடுத்தினர்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டிற்கு பலரும் ஆதரவு கரம் நீட்டினர். நிகழ்வின் கடைசி அங்கமாகஅன்னதானமும் வழங்கப்பட்டது.

21/10/2015  – நவராத்திரி பூஜை

 16வது மைல், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், ரவாங்

திரு. வெற்றிவேல் தலைமையில், இந்த ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜை விழாவில்,               தேவாரம் திருமுறை கச்சேரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுற்று வட்டார பக்தபெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

29/10/2015  – முன்னாள் கே.பி.டி. இந்தியர்களின் உபயம்.

ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயம், கேம் பெர்டானா, சுங்கை பீசி  

இந்த ஆலயத்தின் மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு, முன்னாள் ராணுவ வீரர்களதுஉபயம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் ரவாங் வட்டார பொருளாளர்திரு.குணசேகரன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. திரு. வெற்றிவேல் தலைமையில்தேவாரம், திருமுறை நிகழ்வு அற்புதமாக அமைந்திருந்தது.

31/10/2015  – மேஜர் கதிரேசபதி குடும்பத்தினரின் உபயம்

அம்மன் ஆலயம், சுங்கை பீசி

ரவாங் வட்டாரத்தின் முன்னாள் தலைவரும், இந்நாள் ஆலோசகருமான தொண்டர்மாமணிமேஜர் கதிரேசபதி குடும்பத்தினரின் உபயம் சுங்கை பீசியில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில்வெகு சிறப்பாக நடந்தேறியது. இதில் ரவாங் வட்டார நிர்வாகத்தினர் பலரும் தத்தம்குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டார்கள்.

14/12/2015  – 9 வது வட்டார பேரவைக் கூட்டம்.

அலுவலகம், ஸ்ரீ மகா மாரியம்மன், தாமான் முஹிப்பா, ரவாங்

18/12/2015  – சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை

தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம், கம்போங் தெரெந்தாங், ரவாங்

‘நால்வர் பூஜை’ நிகழ்வின் நான்காம் அங்கமாக சமயக்குரவர் சுந்தரமூர்த்தி நாயனார்குருபூஜை, ரவாங், கம்போங் தெரெந்தாங், தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பாகநடைப்பெற்றது. இதில் வட்டார செயலவை உறுப்பினர்களும் சுற்றுவட்டார பெருமக்களும்கலந்து கொண்டனர். ஆலய நிர்வாகம் இந்நிகழ்வுக்கு பெரும் ஆதரவு தந்தனர்.

19/12/2015  – புக்கிட் பெருந்தோங் பராமரிப்பு இல்லத்திற்கு வருகை

அண்மையில் நடந்த தீ விபத்தின் காரணமாக இந்த பராமரிப்பு இல்லம் எரிந்து போனது.ஆகவே வட்டார சார்பில் நிர்வாகத்தினர் பலரும் இங்கு வருகை புரிந்து தங்களால் ஆனஉதவிகளை வழங்கினர்.

27/12/2015  – திருவிளக்கு பூஜை

            ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், செரென்டா, ரவாங்

சிலாங்கூர் மாநிலப் பேரவை, புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவை மற்றும் ரவாங் வட்டாரப்  பேரவை கூட்டு முயற்சியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 60 மாதர்கள் இதில்கலந்துகொண்டார்கள். சுற்றுவட்டார பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுஆதரவு தெரிவித்தார்கள்.

31/12/2015  – திரு.வெற்றிவேல் இல்லத்தில் நடைபெற்ற குடும்பதின விழா.

2015ஆம் ஆண்டு வருட நிறவையொட்டி, ரவாங் வட்டாரத்தின் குடும்பதின விழா,துணைப்பொருளாளர் திரு.வெற்றிவேல் அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்வட்டார நிர்வாகத்தினர் பலரும் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டனர். உணவுவிருந்துபசரிப்புக்கிடையில் பல கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

05/01/2016  – 10வதுவட்டார பேரவைக் கூட்டம்

அலுவலகம், ஸ்ரீ மகா மாரியம்மன், தாமான் முஹிப்பா, ரவாங்

10/01/2016  – திருமுறை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா.            ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மண்டபம்ம், ரவாங்.

மலேசிய இந்து சங்கம், சிலாங்கூர் மாநிலப் பேரவையின் கீழ் நடைபெற்ற 2015க்கானதிருமுறை விழாவில் சிறப்பாக வெற்றி பெற்ற வெற்றியாளர்களை கௌரவிக்கும் பொருட்டுஇந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதோடு மட்டுமில்லாது, நமது வட்டாரத்தில் திருமுறைபயிலும் மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இவ்விழா ஏற்பாடுசெய்யப்பட்டது. இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள்,பல ஆலய, இயக்கங்களின் நிர்வாகத்தினர்போன்றோர் கலந்து கொண்டனர். பெற்றோர்களின் வருகையும் ஆதரவும் பெருமைப்படத்தக்கவகையில் அமைந்திருந்தது. விழாவின் கடைசி அங்கமாக அன்னதானமும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

15/01/2016  – 38வது இரங்கல் கூட்டம் & கூட்டு பிரார்த்தனை

வட்டாரப் பொருளாளர் திரு. குணசேகரன் இல்லம்.

தொடக்கம் : இரவு 8.00 மணி   முடிவு : இரவு 10.30 மணி

திரு.குணசேகரன் அவர்களின் பெற்றோரின் இரங்கல் கூட்டம் மற்றும் கூட்டு பிரார்த்தனை  நிகழ்வில் ஏறக்குறைய 35 பேர் கலந்துக்கொண்டனர். திரு ஸ்ரீ முருகன் & திரு.வெற்றிவேல் அவர்கள் இருவரும் தேவாரம், திருமுறை மற்றும் சமய சொற்பொழிவுடன்  இந்நிகழ்வை வழிநடத்தினர். இந்நிகழ்வில் திரு.கோவிந்தராஜ் அவர்கள் சிறப்புசொற்பொழிவாற்றினார். வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

XXXXXXXXXXXX———-XXXXXXXXXXXXXXX———-XXXXXX

FREE SEMINAR FOR SPM STUDENTS

spm 1 spm 2

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxIMG_3274

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s